எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி

ஆரணியை அடுத்த களம்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி  பரிமாற்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:22 am

DIN

ஆரணியை அடுத்த களம்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி  பரிமாற்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி பரிமாற்ற திட்டத்தின்கீழ், களம்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலசப்பாக்கம் வட்டம், மேல்வன்னியனூர் ஊராட்சி    ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து 20 மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் ச.வசந்தா தலைமை வகித்தார். ஆசிரியர் ஜி.ராஜேந்திரன் மாணவிகளளுக்கு இனிப்பு அளித்து வரவேற்றார். இதில் சொற்பொழிவாளர் கணேசன், கதையும், பாடலும் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கருத்துக்களை விளக்கினார். தமிழாசிரியர் மு.தாஸ், கல்வி கற்கும் விதம், ஒழுக்கம், கதை சொல்லுதல், கட்டுரை எழுதி காண்பித்தல், நாடகம் நடித்தல், ஓவியம் வரைதல் போன்ற செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விவரித்தார். இதில், பள்ளி ஆசிரியர்கள் ஆர்.சரவணன், என்.அருள்மொழி உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.