யூடியூபில் போதிய வரவேற்பு இல்லாததால் ஆமிர் கானின் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமிர் கான். அவரது நடிப்பில், எழுத்தாளர் திவி நிதி சர்மா எழுதி, இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கிய ”சித்தாரே ஜமீன் பர்” திரைப்படம் கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியாகி ரூ. 150 கோடி வரை வசூலித்தது.
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, கூடைப்பந்து சொல்லித் தரும் பயிற்சியாளராக, ஆமிர் கான் நடித்திருந்த இந்தப் படம், மொழிகளைக் கடந்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றது.
தொடர்ந்து, தயாரிப்பாளரான ஆமீர் கான், சித்தாரே ஜமீன் பர் திரைப்படத்தை எந்தவொரு முன்னணி ஓடிடி தளங்களிலும் வெளியிடாமல், யூடியூபில் கட்டணம் வசூலித்து அனைவரும் காணும் வகையில் வெளியிடுவோம் என அறிவித்திருந்தார்.
கூறியதுபோல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேரடியாக யூடியூபில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது சோனி லைவ் ஓடிடிக்கு இப்படத்தை விற்பனை செய்ததாகவும் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. யூடியூபில் போதிய வரவேற்பு இல்லாததாலேயே ஆமீர் கான் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
Summary
actor aamir khan's sitaare zameen par movie will release soon in sony liv ott
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே - பிரதீப்பின் முதல் தோல்வி?

தமிழில் வெளியாகும் வாழ - 2!
விரைவில் வெளியாகும் ஏழுகடல் ஏழுமலை!

சித்தாரே ஜமின் பர் ஓராண்டுக்குப் பின் ஓடிடியில் ரிலீஸ்! ஆமிர் கான் விளக்கம்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

