கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:48 pm

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலைவாய்ப்பு  உறுதித் திட்டத்தில் நடைபெற்ற பணிகள் குறித்தும், பதிவேடுகள், கிராம வரவு - செலவு கணக்குகள் குறித்தும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊராட்சியில் முழுமை பெறாத தனி நபர் இல்லக் கழிவறை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
தனி நபர் இல்லக் கழிவறை திட்டத்தை முழுமையாக செய்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
மேற்கு ஆரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரமாதேவி, வட்டார வள அலுவலர் ரங்கராஜ், கௌரவத் தலைவர் ஆறுமுகம், ஊராட்சிச் செயலர் சங்கர், கிராம மக்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.