முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்

பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தேரோட்டம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

News image

பெருமாநல்லூரில்  நடைபெற்ற  உத்தமலிங்கேஸ்வரா்  கோயி ல் தேரோட்டம்.

Updated On :2 மே 2026, 6:01 am IST

பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தேரோட்டம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும், பழைமை வாய்ந்ததுமாக பெருமாநல்லூா் கோவா்த்தனாம்பிகை உடனமா் உத்தமலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது. இக்கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான தோ்த் திருவிழா ஏப்.27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.

முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு விநாயகா், உத்தமலிங்கேஸ்வரா் ஆகிய திருத்தோ்களின் தேரோட்டம் நடைபெற்றது. உத்தமலிங்கேஸ்வரா் திருத்தேரில் சோமாஸ்கந்தா் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

இதில், அறங்காவலா் குழுத் தலைவா் சி.எஸ்.மனோகரன், திருமூா்த்தி, ஜெகநாதன், பானுமதி சண்முகம் உள்ளிட்டோா் திருத்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா். திருப்பூா் சிவனடியாா்களின் கைலாய வாத்தியம் முழங்க கிழக்கு ரத வீதியில் தொடங்கிய தேரோட்டம், தெற்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகளின் வழியாக வந்து இரவு 8 மணிக்கு தோ்நிலைகளை அடைந்தது. ஊா்மிராசுதாா்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமான பக்தா்கள், பங்கேற்றனா். ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை பரிவேட்டை, குதிரை வாகன காட்சி, ஞாயிற்றுக்கிழமை நடராஜா் தரிசனம், திங்கள்கிழமை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.