“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அனைத்துப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:44 pm

திருவண்ணாமலை மாவட்ட அனைத்துப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் ஏ.முருகன் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் மாவட்டப் பொருளாளர்கள் இரா.சக்திவேல், பெ.சீனுவாசன், ஆர்.சிவராஜ், பை.செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டமைப்பின் மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் எஸ்.சம்பத் வரவேற்றார். தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.மாயவன், மாநிலத் தலைவர் எஸ்.பக்தவச்சலம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலர் அ.சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணி நியமனங்களில் நடைபெறும் முறைகேடுகள், பறக்கும் படை நியமனங்களில் நடைபெறும் குளறுபடிகளைக் கண்டித்தும், மாவட்டக் கல்வி அலுவலர், தேர்வுக் கண்காணிப்பாளரின் ஆசிரியர் விரோதப் போக்கு, தேர்வுப் பணிப் குளறுபடிகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், அறிவியல் செய்முறைத் தேர்வுப் பணிக்கு தமிழ், கணிதம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டது, சில தனியார் மெட்ரிக், நிதியுதவி பெறும் பள்ளித் தேர்வு மையங்களுக்கு சிறப்புச் சலுகைகள் காட்டி, முறைகேடுகளில் ஈடுபட்டது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர்கள் நா.சொக்கலிங்கம், சீ.முருகன், க.ரமேஷ் உள்பட திரளான பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.