காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி, திருவண்ணாமலையில் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.செல்வம் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் பி.ஆனந்தன், இணைச் செயலர் சீனு, மாநில இளைஞரணிச் செயலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் தலைவர் ஏ.தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில், மாவட்டச் செயலர் பி.சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பக்ரீத் பண்டிகை: மாடு, ஒட்டக இறைச்சி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!

பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் இருப்பதே பாஜகவின் கொள்கை: கார்கே
தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்த கருப்பு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? -கனிமொழி கேள்வி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


