அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!
/

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? -கனிமொழி கேள்வி

தமிழ்நாட்டில் நாள்தோறும் நடக்கக்கூடிய குற்ற சம்பவங்கள் கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது என கனிமொழி கூறியிருப்பது தொடர்பாக...

News image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி. - டிஎன்எஸ்

Updated On :25 மே 2026, 3:24 pm IST

தமிழ்நாட்டில் நாள்தோறும் நடக்கக்கூடிய குற்ற சம்பவங்கள் கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? என திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்....

அப்போது, தமிழ்நாட்டில் நாள்தோறும் நடக்கக்கூடிய குற்றச்சம்பவங்கள் மிகவும் கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது....

ஒவ்வொரு நாளும் ஒன்று இல்லை, ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளன....

குழந்தைகள், இளைஞர்கள் என்று சிறுவர்கள் கூட தாக்கப்படும் சூழல் உள்ளதை நாம் சந்தித்துக் கொண்டுள்ளோம்....

சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா என்கிற கேள்விக்குறி உள்ள சூழ்நிலையில் இன்று தமிழகம் மாட்டிக் கொண்டுள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

புதிதாக பதவியேற்றுள்ள அரசு அவர்களுக்கு போதிய அவகாசம் தரப்பட்டுள்ளது, இதற்கு பிறகும் கூட சூழ்நிலையை அவர்கள் சரி செய்யவில்லை என்றால் நிச்சயமாக மக்களின் அவநம்பிக்கைக்கு தான் ஆளாக வேண்டி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டி இருக்கும் என்றார்.

Summary

Regarding the statement made by DMK Deputy General Secretary Kanimozhi that the criminal incidents occurring daily in Tamil Nadu have become a matter of concern...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.