ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு: கனிமொழி

யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்திருப்பது குறித்து...

Tamil Nadu has become a state where no one is safe

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி - எக்ஸ்

Published On :

குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

மு.க.ஸ்டாலின்-காவல்துறைக்கு நன்றி

விளாத்திகுளம் வேடநத்தம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இன்று தண்டனை வழங்கியுள்ளது தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம்.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருடன் துணை நின்று, குற்றம் நடந்த 76 நாள்களில் இந்த வழக்கின் விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, நீதியைப் பெற்றுதந்துள்ள முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றி.

குற்றவாளிக்கான தண்டனையை சட்டம் உறுதிசெய்துவிட்டது. இனி இதுபோல எந்தவொரு பெண்ணுக்கும் நடக்காதவாறு, கூட்டு மனசாட்சியோடு இயங்கும் இந்தச் சமூகம் தான் உறுதிசெய்யவேண்டும். அதற்கான வழிகளை அரசு தான் ஏற்படுத்தித் தரவேண்டும்.

நம்புகிறேன்

அடுத்தடுத்த பதிவில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மேற்கு மண்டலத்தில் தொடங்கி தஞ்சை டெல்டா வரை தமிழ்நாட்டில் பாதியை பாலைவனமாக்கத் துடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் திட்டத்தை, திமுக ஆட்சியிலிருந்த வரை தடுத்து நிறுத்தியது.

தற்போது, தவெகவின் அமைச்சரவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் பங்குகொண்டிருக்கும் நிலையில், காவிரிப் பிரச்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலையிட்டு உடனடியாக அத்திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் என நம்புகிறேன்.

பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

விடிந்ததும், இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது. குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு.

சட்டம்-ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை, இந்த புதிய அரசு அறிந்துள்ளாதா என்பதே சந்தேகமாகவுள்ளது.

அவநம்பிக்கைக்கு ஆளாக நேரிடும்

சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா என்ற கேள்விக்குறியில் தமிழ்நாடு மாட்டிக்கொண்டு இருக்கிறது...

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசுக்கு போதிய அவகாசம் தரப்பட்டிருக்கிறது இதற்குப் பிறகும் சூழலை அவர்கள் சரிசெய்யவில்லை என்றால் மக்களின் அவநம்பிக்கைக்கு ஆளாக நேரிடும் என கனிமொழி கூறியுள்ளார்.

Summary

Regarding the statement made by DMK Lok Sabha MP Kanimozhi has stated that Tamil Nadu has become a state where no one is safe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.