40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நீட் ஒழியாத வரை நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை! கனிமொழி

நீட் தேர்வு குறித்து திமுக எம்.பி. கனிமொழி கருத்து...

News image

கோப்புப் படம் - ANI

Updated On :15 மே 2026, 5:10 pm IST

நீட் ஒழியாத வரை நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்துள்ளதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து நீட் மறுதேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்றும் அடுத்தாண்டு முதல் கணினிவழியாக நீட் தேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில், "நீட் என்பதே அடிப்படையில் ஒரு மோசடிதான் என்பதை ஆரம்பத்திலிருந்து சொல்லிவருகிறது தி.மு.க.

தொடர் முறைகேடுகளால், அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தவும் செய்கிறது ஒன்றிய பாஜக அரசு.

நீட் ஒழியாத வரை.. நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை!" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Until NEET is abolished, our children will have no peace: Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.