
கிராம நிர்வாக அலுவலர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வட்டங்களிலும் பணிபுரியும் சுமார் 500 கிராம நிர்வாக அலுவலர்கள், தங்களது 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலையில் பேரணி
திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வட்டங்களிலும் பணிபுரியும் சுமார் 500 கிராம நிர்வாக அலுவலர்கள், தங்களது 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலையில் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவண்ணாமலை, வேங்கிக்கால், மின்வாரிய அலுவலகம் எதிரில் இருந்து பேரணியாகச் சென்ற அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.ஏழுமலை முன்னிலை வகித்தார்.
மாவட்ட அமைப்புச் செயலாளர் கே.வெங்கடரமணன், இணைச் செயலாளர்கள் பி.விஜயகுமார், எஸ்.கோதண்டராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்பட 21அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்டத்தின் 12 வட்டங்களிலும் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






