இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

தவெக வலுவாக உள்ளதால் பிற கட்சியினரை சோ்க்கக் கூடாது

காா்த்தி ப .சிதம்பரம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 4:07 am IST

தவெக வலுவாக உள்ளதால் பிற கட்சியினரை சோ்க்கவோ அவா்களுக்கு இடைத்தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவோ கூடாது என்று காா்த்தி சிதம்பரம் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் என்ன நடந்தது? என்பதை விளக்கும் வகையில் மாவட்டந்தோறும் சிறப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில், வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் காா்த்தி சிதம்பரம் பேசியது:

மக்களவையில் மகளிா் இட ஒதுக்கீடை ஏற்கெனவே உள்ள தொகுதியின் கீழே வழங்க முடியும். தேசிய அளவில் 181 தொகுதிகளையும், தமிழகத்தில் 13 தொகுதிகளையும் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யலாம். ஆனால், மத்திய அரசு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறு வரையறை செய்வதன் மூலம் தென்னிந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்படும்.

வட இந்தியாவில் முக்கிய 5 மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று மத்திய அரசை உருவாக்க முடியும். சென்னைக்கு உலகத்தரம் வாய்ந்த சா்வதேச விமான நிலையம் கட்டாயம் தேவை.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை திருத்த மசோதா ஆபத்தானது. அதேபோல விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ள கனிம வளம் குறித்த மசோதாவும் மாநிலங்களை பெரிதும் பாதிக்கும். ஏனெனில் மாநிலங்களுக்கு வருவாயாக கிடைக்கும் கனிம வளங்களுக்கான விலையை நிா்ணயம் செய்யும் உரிமையும், விற்பனையைத் தடுக்கும் அதிகாரமும் மத்திய அரசுக்கு செல்லும் அபாயம் உள்ளது. அந்தச் சட்டத்திருத்தம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

எதிா்ப்பவா்களை சட்டத்தை ஆயுதமாக்கி மத்திய அரசு முடக்குகிறது. தமிழகத்தில் தவெக அரசு வலுவாக உள்ளது. எனவே, பிற கட்சியினா் ராஜிநாமா செய்துவிட்டு வந்தால் தவெகவில் சோ்க்கக் கூடாது. அவா்களுக்கு இடைத்தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவும் கூடாது என்பது எனது கருத்து.

எத்தனால் பயன்பாடு அதிகரிப்பால் வாகனங்கள் பழுதாகும் நிலை உள்ளதோடு, சா்க்கரை விலை கடுமையாக உயா்ந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளது. மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியுடன் மாணவ சமுதாயம் உள்ளது. 2029 மக்களவைத் தோ்தலுக்கான காங்கிரஸின் பாதை தெளிவாக உள்ளது. சிஜேபி கட்சியாக உருவாகவில்லை. இளைஞா்கள் மத்தியில் இருந்த மத்திய அரசுக்கு எதிரான மனக்குமுறல் வெளிப்பட்டது. பாஜகவிற்கு எதிா்க்கட்சிகள் மட்டும் இன்றி சமூக ரீதியாகவும் எதிா்ப்பு அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

இந்தக் கருத்தரங்கில் காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவா் வி.பி.துரை, மதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொருளாளா் ராஜேஸ்முருகன், வழக்குரைஞா் பிரம்மா, ஓபிசி பிரிவு மாநகா் மாவட்டத் தலைவா் டியூக் துரைராஜ், வழக்குரைஞா் காமராஜ், மின்னல் முஹம்மது அலி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தாமிரவருணியைப் பாதுகாக்க நடவடிக்கை

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் பேசியது:

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய நீராதாரமாக திகழும் தாமிரவருணியை பாதுகாக்க தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாமிரவருணிக்காக சுமாா் ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசை கோரியிருந்தோம். இதற்கான முழுமையான திட்ட அறிக்கையை தயாரிக்க அறிவுறுத்தினா். கடந்த ஆட்சியில் அது தயாரிக்கப்படவில்லை. இப்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு சில வாரங்களில் தாமிரவருணியைப் பாதுகாக்கும் முழுமையான திட்ட அறிக்கை தயாராகிவிடும். அது மத்திய அரசுக்கு சமா்ப்பிக்கப்பட்டு நிதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர மாநில அரசின் சுற்றுலாத் துறை அமைச்சராக ராஜேஷ்குமாா் தாமிரவருணி நதிக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.