மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி  கல்லூரி சிறப்பிடம்

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வில் வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மாணவிகள்

News image
Updated On :9 ஜூலை 2018, 1:30 am

DIN

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வில் வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மாணவிகள் இளநிலை பாடப்பிரிவில் இயற்பியல் பாடத்திலும், முதுநிலை பாடப்பிரிவில் நுண்ணுயிரியல், கணினி அறிவியல் பாடங்களிலும் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றனர்.
இதுகுறித்து அந்தக் கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவில் உயிர் வேதியியலில் 91 சதவீதம், நுண்ணுயிரியலில் 85 சதவீதம், கணினி அறிவியலில் 97 சதவீதம், கணிதத்தில் 70 சதவீதம், இயற்பியலில் 100 சதவீதம், வேதியலில் 85 சதவீதம், ஆங்கிலத்தில் 89 சதவீதம், வணிகவியலில் 78 சதவீதம், பி.சி.ஏ. பாடத்தில் 79 சதவீதம், பி.காம் (சி.ஏ) பாடத்தில் 58 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், முதுநிலை பாடப்பிரிவில் உயிர் வேதியியலில் 69 சதவீதம், நுண்ணுயிரியலில் 100 சதவீதம், கணினி அறிவியலில் 100 சதவீதம், கணிதத்தில் 79 சதவீதம், இயற்பியலில் 83 சதவீதம், வேதியலில் 91 சதவீதம், ஆங்கிலத்தில் 77 சதவீதம், வணிகவியலில் 92 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, கல்லூரிப் பேராசிரியைகளை கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம், கல்லூரிச் செயலர் 
எம்.ரமணன், கல்லூரி முதல்வர் எஸ்.மைதிலி ஆகியோர் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.