தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 9:55 am IST

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் உள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைச் செயலர் அமுதா, மாவட்டப் பொருளாளர் எம்.எஸ்.நைனாக்கண்ணு, நகரச் செயலர் ஜெ.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், திருவண்ணாமலை நகரின் அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர ரூ.20 கோடி ஒதுக்கிய தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கிரிவலப் பாதையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக சோடியம் விளக்குகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கிய சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோருக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிப்பது.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திருவண்ணாமலை நகரில் ஒரு பூத் கமிட்டிக்கு 18 பேர், 200 வாக்காளர்களுக்கு 5 பேர் என பொறுப்பாளர்களை நியமிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அமைப்பு சாரா ஓட்டுநரணி மாவட்டச் செயலர் சுனில்குமார், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி துணைச் செயலர் எஸ்.ஆர்.பழனி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலர் சத்யபிரகாஷ், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வி.பவன்குமார், முன்னாள் மாவட்டப் பிரதிநிதி டிஸ்கோ எஸ்.குணசேகரன், நகர துணைச் செயலர் ஆர்.அரசப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.