தொடர் விபத்துகள் நிகழும் செய்யாறு - ஆரணி சாலை
தொடர் விபத்துகள் நிகழும் சாலையாக செய்யாறு - ஆரணி சாலை இருந்து வருகிறது. 33 கீ.மீ. தொலைவுள்ள இந்தச் சாலையில் 66 வளைவுகள் உள்ளன.


தொடர் விபத்துகள் நிகழும் சாலையாக செய்யாறு - ஆரணி சாலை இருந்து வருகிறது. 33 கீ.மீ. தொலைவுள்ள இந்தச் சாலையில் 66 வளைவுகள் உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தின் 2-ஆவது வருவாய்க் கோட்டமாக விளங்கி வருகிறது செய்யாறு. இங்கிருந்து மாவட்டத் தலைநகரான திருவண்ணாமலைக்குச் செல்லும் சாலையாக இருந்து வருகிறது செய்யாறு - ஆரணி சாலை. இந்தச் சாலையில் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டப் பகுதிகள் அமைந்துள்ளன. மேலும், செய்யாறு, ஆரணி, ஆற்காடு ஆகிய 3 சட்டப்
பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளும் அமைந்துள்ளன.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், ஆரணி, செய்யாறு, சென்னை ஆகிய பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்தும், ஆரணி, களம்பூர் ஆகிய பகுதிகளுக்கு சென்னையிலிருந்து சரக்கு லாரி போக்குவரத்தும் செய்யாறு - ஆரணி சாலை வழியாகத்தான் நடைபெற்று வருகின்றன.
66 வளைவுகள்: 33 கி.மீ. தொலைவுள்ள செய்யாறு - ஆரணி சாலையில் பைங்கிணர், அருகாவூர், சுண்டிவாக்கம், இருங்கூர், தட்டச்சேரி, தண்டரை, வடுகப்பட்டு, பெரும்பள்ளம், கன்னிகாபுரம், சிவபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய அளவிலான மற்றும் அபாயகரமான வளைவுகள் என 66-க்கும் மேற்பட்ட வளைவுகள் உள்ளன.
தொடர் விபத்துகள்: செய்யாறு - ஆரணி சாலையில் தண்டரை, பெரும்பள்ளம், அருகாவூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் சுமார் 10 -க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். சாலை குறுகலாக உள்ளதாலும், வளைவுகள் அதிகமாக உள்ளதாலும் இந்தப் பகுதியில் அதிக விபத்துகள் நிகழ்வதாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை: எனவே, 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிக்க செய்யாறு - ஆரணி சாலையை அகலப்படுத்திட வேண்டும் என்றும், விபத்துகள் ஏற்படாத வண்ணம் தேவைப்படும் இடங்களிலும், வளைவுப் பகுதிகளிலும் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைத்திட வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை
விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...