தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 600 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 600 மனுக்கள் வரப்பெற்றன.

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 600 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பொதுமக்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, சாதிச் சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்
கொண்டார்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்: குறைதீர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ஒருவருக்கு ரூ.6,400 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், ஒருவருக்கு ரூ.4,910 மதிப்பிலான சக்கர நாற்காலி, 2 பேருக்கு ரூ.930 மதிப்பிலான ஊன்றுகோல்கள், ஒருவருக்கு ரூ.1,580 மதிப்பிலான ப்ரெய்லி கைக் கடிகாரம் மற்றும் கருப்புக் கண்ணாடி, மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சார்பில் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணமடைந்தவருக்கு ரூ.17 ஆயிரம், பார்வையற்றோருக்கான திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ.12,500 மதிப்பிலான 4 கிராம் தங்கம், 105 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் திருவண்ணாமலையை அடுத்த கமலப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த துரை மனைவி மணிமேகலைக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குநர் ப.ஜெயசுதா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.