தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பள்ளியில் நூல் பயண நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகம் சார்பில், திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நூல் பயண நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:38 am

DIN

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகம் சார்பில், திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நூல் பயண நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மாணவிகளிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் பிடி.. படி... சொல்... என்ற புதுமையான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். மைய நூலகத்தின் முதல் நிலை நூலகர் வள்ளி முன்னிலை வகித்தார்.
"சேற்றிலே மலர்ந்த செந்தாமரை" என்ற நூலை மாணவி எ.யமுனா, "உங்களால் முடியும்" என்ற நூலை மாணவி 
வி.சிவகாமி, "வெற்றி உங்கள் கையில்" என்ற நூலை மாணவி எஸ்.யமுனாஸ்ரீ ஆகியோர் படித்து, அதை அறிமுகம் செய்து வைத்து மற்ற மாணவிகளுடன் கலந்துரையாடினர்.
நிகழ்ச்சியில், 52 மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களிடையே படிக்கும் தன்மையை வளர்த்துக் கொள்வது எப்படி, நூல்களை எப்படி வாசிக்க வேண்டும், வாசிக்கும் நேர்த்தி, புதுமைகள், யுக்தி குறித்து பேராசிரியர் இரா.சங்கர் விளக்கினார்.
இதில், மைய நூலகத்தின் நல் நூலகர்கள் சாயிராம், வெங்கடேசன், ஆசிரியர் நித்யா மற்றும் நூலகப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.