நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

போளூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

போளூரில் பட்டேல் அல்லாபஷ்சா தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் திங்கள்கிழமை அகற்றினர்.

Updated On :14 மே 2018, 10:52 pm

போளூரில் பட்டேல் அல்லாபஷ்சா தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் திங்கள்கிழமை அகற்றினர்.
போளூர் சிறப்பு நிலைப் பேரூராட்சி 6-ஆவது வார்டில் பட்டேல் அல்லாபஷ்சா தெருவில் வசிக்கும் சிலர் தெருவை ஆக்கிரமித்தும், கால்வாய் மீது சிலாப் அமைத்தும் உள்ளதால், அந்தத் தெருவில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமா பானு, துப்புரவு ஆய்வாளர் சோமு உள்ளிட்ட அலுவலர்கள் அங்கு சென்று ஊழியர்களின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.