கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறாததால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தீர்வு காணக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கப் பணியாளர்களும் திங்கள்கிழமை (மே 21) தொடர் விடுப்பு எடுப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளரும், திருவண்ணாமலை மாவட்டச் செயலருமான ஏ.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் முழுவதும் சுமார் 4,500 தொடக்க கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்டன. தேர்தல் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஏற்கெனவே பொறுப்பில் இருந்து வந்த நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் மே 8-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதன் காரணமாக கூட்டுறவு சங்கங்கள் செயல்பட முடியாத அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
அதன்படி, மே 8-ஆம் தேதிக்குப் பிறகு சங்கங்களில் எவ்வித தீர்மானமும் நிறைவேற்ற இயலாததால் பயிர்க்கடன் வழங்குதல், நகைக் கடன் வழங்குதல், மகளிர் குழுக் கடன் வழங்குதல் உள்ளிட்ட எவ்வித கடன் வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ள இயலவில்லை.
சங்கங்களுக்குரிய காசோலைகளின் மூலம் மத்திய வங்கியில் பணம் பெற இயலாததால் சங்கங்களில் இட்டு வைப்பு செய்துள்ள வைப்புதாரர்களுக்கு முதிர்வடைந்த வைப்புத் தொகையை திரும்ப வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சங்கத்தின் அன்றாட வரவு, செலவுகளை மேற்கொள்ளவும் இயலாத நிலை இருந்து வருகிறது.
பணியாளர், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வுகால நிதிப் பலன்கள் வழங்க இயலவில்லை. சங்கத்தின் இருப்பு பரிசோதனை அறிக்கை, ஆண்டு இறுதி தணிக்கை அறிக்கைகளில் நிர்வாகத்தால் முழுமையாக கையொப்பம் பெற்று வழங்க இயலவில்லை.
எனவே, இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட்டு, சங்கங்கள் தொய்வின்றி செயல்பட உரிய நடவடிக்கையை கூட்டுறவுத் துறை அமைச்சரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரும், தமிழக அரசும் எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் மனுவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் அளித்துள்ளோம்.
எனினும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, திங்கள்கிழமை (மே 21) முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்கங்களின் செயலர்களும் திங்கள்கிழமை (மே 21) முதல் தொடர் விடுப்பு எடுப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திங்கள்கிழமை (மே 21) காலை 10.30 மணிக்கு திருவண்ணாமலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

