தண்டராம்பட்டு அருகே மர்ம விலங்கு கடித்ததில் 12 ஆடுகள் இறந்தன.
தண்டராம்பட்டை அடுத்த திம்மியம்பேட்டை கிராமம், குறவன் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் குப்பன் (45). இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணன் (35), ஏழுமலை (43). இவர்கள் அனைவரும் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமான நிலம் காட்டுப் பகுதியோரம் உள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை விவசாயிகள் மூவரும் ஆடுகளை தங்களுக்குச் சொந்தமான பட்டிகளில் அடைத்துவிட்டு, வீட்டுக்குச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் பட்டிகளுக்குச் சென்றபோது, குப்பனுக்குச் சொந்தமான 6 ஆடுகள், ஏழுமலைக்குச் சொந்தமான 3 ஆடுகள், கண்ணனுக்குச் சொந்தமான 3 ஆடுகள் என மொத்தம் 12 ஆடுகள் உடலின் பல்வேறு இடங்களில் காயங்களுடன் இறந்து கிடந்தன.
பாதிக்கப்பட்ட மூவரும் தானிப்பாடி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். மேலும், தானிப்பாடி அரசு கால்நடை மருத்துவர் முத்துசாமி வந்து ஆடுகள் எப்படி இறந்தன என்பது குறித்து விசாரித்தார்.
இந்த நிலையில், காட்டில் இருந்து வந்த மர்ம விலங்கு கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலைவலம்!

ராகுல்காந்தி நாளை குளச்சல், நான்குனேரியில் பிரசாரம்!

திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்

ரிங்கு சிங் அரைசதம் விளாசல்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு முதல் வெற்றி!
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

