ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

துரிஞ்சாபுரம், தச்சம்பட்டு உள் வட்டங்களுக்கான ஜமாபந்தி

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற துரிஞ்சாபுரம், தச்சம்பட்டு உள் வட்டங்களுக்கான ஜமாபந்தியில் 315 மனுக்கள் வரப் பெற்றன.

Updated On :21 மே 2018, 7:19 pm

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற துரிஞ்சாபுரம், தச்சம்பட்டு உள் வட்டங்களுக்கான ஜமாபந்தியில் 315 மனுக்கள் வரப் பெற்றன.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிகழாண்டுக்கான ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. 3-ஆவது நாளான திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் (ஜமாபந்தி அலுவலர்)
பொ.ரத்தினசாமி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.
இதில், துரிஞ்சாபுரம், சொரந்தை, களஸ்தம்பாடி, சடையனோடை, மல்லவாடி, ஊசாம்பாடி, சானானந்தல், முனியந்தல், இனாம்காரியந்தல், காட்டாம்பூண்டி, பாவுப்பட்டு, சின்னகல்லபாடி உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய 315 மனுக்களை அளித்தனர்.
ஜமாபந்தியில் திருவண்ணாமலை வட்டாட்சியர் கு.மனோகரன், வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.முருகன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் டி.ரமேஷ்குமார், தனி வட்டாட்சியர்
இர.ரவி உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.