மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பைக் மோதியதில் வியாபாரி சாவு

செய்யாறு அருகே அடையாளம் தெரியாத பைக் மோதிய விபத்தில் துணி வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :21 மே 2018, 7:18 pm

செய்யாறு அருகே அடையாளம் தெரியாத பைக் மோதிய விபத்தில் துணி வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் நத்தம்பேட்டை நடுத் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் சுரேஷ். துணி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்களில் காஞ்சிபுரத்திலிருந்து உக்கம்பெரும்பாக்கம் கிராமத்துக்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத பைக் அவர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டதாம். காயத்துடன் வீட்டுக்குச் சென்ற சுரேஷ் தூங்கிவிட்டாராம். மறுநாள் காலை அவரது மனைவி அவரை எழுப்பிய போது, மயக்க நிலையில் இருந்தாராம். உடனடியாக அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அய்யனார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.