சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

வீரவைராக்கிய மூர்த்தி குருபூஜை

திருவண்ணாமலை மாவட்ட விஸ்வ பிராமணர் நலச் சங்கம் சார்பில், ஸ்ரீவீரவைராக்கிய மூர்த்தி சுவாமிகளின் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 2:14 am

திருவண்ணாமலை மாவட்ட விஸ்வ பிராமணர் நலச் சங்கம் சார்பில், ஸ்ரீவீரவைராக்கிய மூர்த்தி சுவாமிகளின் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் நடைபெற்ற குருபூஜை விழாவுக்கு ஸ்ரீநந்தல் மடாலயத்தின் 65-ஆவது மடாதிபதி ஸ்ரீசிவராஜி சுவாமிகள் தலைமை வகித்தார். இதையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை இரவு 1,269-ஆவது ஆண்டு ஸ்ரீநந்தல் ஸ்ரீவீரவைராக்கிய மூர்த்தி சுவாமிகளின் குருபூஜை விழா சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன. விழாவில், சங்கத் தலைவர் அ.நக்கீரன், துணைத் தலைவர் வி.சந்திரசேகரன், செயலர் எஸ்.ரங்கநாதன், பொருளாளர் கே.கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம், சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.ராஜவேல், எஸ்.சுந்தர், ஆர்.சுரேஷ்பாபு, வி.சுந்தரேசன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.