400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

திருவண்ணாமலை - சென்னை இடையே தினமும் 2 பயணிகள் ரயில் இயக்கக் கோரிக்கை

திருவண்ணாமலை - சென்னை இடையே தினமும் 2 பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் நலச் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

Updated On :25 மே 2018, 12:37 am IST

திருவண்ணாமலை - சென்னை இடையே தினமும் 2 பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் நலச் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் நலச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.வைத்தியலிங்கம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி.கே.பலராமன், செயலர் பி.பலராமன், துணைச் செயலர் ஆர்.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் கெளரவத் தலைவர் எம்.சிவலிங்கம் வரவேற்றார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.தியாகராஜன், மாவட்டச் செயலர் பி.மூர்த்தி, ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் வீ.மதிழயகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சங்கத்தின் தலைமையிடச் செயலர் வி.தேவகண்ணன், மாநில கொள்கை பரப்புச் செயலர் வி.பக்கிரிசாமி, மாநிலப் பொருளாளர் கே.சீனுவாசன், மாநிலச் செயலர் எம்.எஸ்.செல்வராஜி, மாநிலத் தலைவர் கே.வேலுச்சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், காவிரிப் படுகை நிலங்களை அழிக்கும் வகையிலான மீத்தேன் வாயுத் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். இதேபோல, நியூட்ரினோ அணுத்துகள் ஆய்வுத் திட்டத்தையும் கைவிட வேண்டும். திருவண்ணாமலை - சென்னை இடையே தினமும் 2 பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.