ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசுகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள ஆரணி ஒன்றிய, நகர அதிமுக நிர்வாகிகள், மேற்கு ஆரணி ஒன்றியம், கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகிகள், ஊராட்சிச் செயலர்கள், கிளைச் செயலர்கள், பேரூராட்சிச் செயலர்கள், வட்டச் செயலர்களுக்கு திபாவளி பரிசுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 600-க்கும் மேற்பட்டோருக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தீபாவளி பரிசுப் பொருள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், ஆரணி எம்.பி. செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, அரசு வழக்குரைஞர் க.சங்கர், நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் பாரி பி.பாபு, நகரச் செயலர் எ.அசோக்குமார், மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரன், முன்னாள் எம்எல்ஏ ஜெமினி கே.ராமச்சந்திரன், ஒன்றியச் செயலர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெ.சம்பத், நகர அவைத் தலைவர் ஜோதிலிங்கம், மாணவரணி குமரன், பையூர் சதீஷ், புங்கம்பாடி சுரேஷ், மினர்வா இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






