செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையும் இணைந்து நடத்திய இந்த முகாம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.
தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக நடைபெற்ற ரத்த தான முகாமுக்கு வெம்பாக்கம் அரசு பொது மருத்துவமனை மருத்துவர் புகழேந்தி தலைமை வகித்தார்.
வெம்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் வி.என்.பத்மபிரியா முன்னிலை வகித்தார். வட்டாரச் செயலர் க.சரவணன் வரவேற்றார்.
காஞ்சிபுரம் மாவட்ட ரத்த தான மருத்துவர் ஜான்சி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பங்கேற்று 29 பேர் அளித்த ரத்தத்தை தானமாகப் பெற்றனர். நிகழ்ச்சியில், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கி.ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலர் வே.சுதாகர், முன்னாள் பொறுப்பாளர்கள் ப.மனோகர், ஆ.தயாளன், அ.சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் வி.ஜி.ராதாகிருஷ்ணன், சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், தா.வெங்கிடேசன், பத்மாவதி, எம்.சத்தியநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜல்லி கற்களை ஏற்றிவந்த ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு! | Tambaram

கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக டெஸ்ட் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!

அறிவியல் ஆயிரம்: மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? புதிய ஆய்வு சொல்லும் தகவல்!

ஓ சுகுமாரி படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


