நடிகர் ரஜினிகாந்த் தன் 173-வது திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஷ்வத் மாரிமுத்து உள்பட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில், இப்படத்திற்கு தர்மன் எனப் பெயரிட்டுள்ளதை அறிவித்தனர்.
தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது, “பேச அழைக்கிறோம் எனச் சொன்னலே தயக்கமாக இருக்கிறது. காரணம், நான் பேசினால் மற்றவர்களுக்கும் பிரச்னை, எனக்கும் பிரச்னை. ஏதாவது கிளப்பிக்கொண்டே இருப்பார்கள். நான் சும்மா இருந்தால் இவர் என்ன பேசவே மாட்டேன் என்கிறார்? வாயில் என்ன கொழுக்கட்டை வைத்திருக்கிறாரா? என்பார்கள். பேசினால், “ஆமாம், இப்ப பேசு” எனக் கிண்டல் அடிப்பார்கள். ரொம்ப நாள் கழித்துதான் ஒன்றை தெரிந்துகொண்டேன், நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது; நமக்குப் பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அஷ்வத் மாரிமுத்து இப்படத்தின் நான்காவது இயக்குநர். முதலில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. அது கைவிடப்பட்டதும் இயக்குநர் சுந்தர். சி இணைந்தார். அவரும் விலகியதால், இயக்குநர் சிபி சக்ரவர்த்தி வந்தார். அணு ஆயுதம் தொடர்பான அவரின் கதை நன்றாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு ஆப்கானிஸ்தான் உள்பட பல நாடுகளில் நடைபெறும்படி இருந்ததால் வேறு கதையைக் கேட்க ஆரம்பித்தோம். இறுதியாக, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வந்தார். அதேநேரம், நடிகர் கமல்ஹாசன் கதையைக் கேட்க மாட்டேன்; நீங்கள் என்ன முடிவு செய்தாலும் எனக்கு ஒப்புதல்தான் என்றார். ஆனால், நான் கதையைக் கேளுங்கள் எனச் சொன்னதால் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்றார்.
தொடர்ந்து, அஷ்வத் மாரிமுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு அதிக பொறுப்பு இருப்பது புரிகிறது. அதேநேரம், இந்த வெற்றிக்காக அனைவரும் பங்குபெற்று உழைக்க வேண்டும். அஷ்வத்தின் டிராகன் எனக்குப் பிடித்த படம். கண்டிப்பாக இப்படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Actor Rajinikanth has spoken about his 173rd film.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஜினி - 173 அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

ரஜினி படத்திற்குப் பின் சிலம்பரசனை இயக்கும் அஷ்வத் மாரிமுத்து!

கருப்பு திரைப்படத்தில் நடித்தது ஏன்? இந்திரன்ஸ் விளக்கம்!

விஜய் முதல்வராவதைத் தடுத்தேனா? ரஜினிகாந்த் விளக்கம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



