பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வேளாண் மாணவிக்கு கோவை பல்கலை.யில் இடம் வழங்கப் பரிந்துரை

திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 3-ஆம் ஆண்டு படிக்க இடம் வழங்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு

Updated On :5 நவம்பர் 2018, 9:28 am IST

திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 3-ஆம் ஆண்டு படிக்க இடம் வழங்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி பரிந்துரை செய்தார்.
 தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமத்தில் அரசு வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, பி.எஸ்சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த சென்னையைச் சேர்ந்த மாணவிக்கு இதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் தங்கபாண்டியன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்தாராம். இந்தப் பிரச்னை குறித்து 6 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 இதனிடையே, பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவியை திருச்சியில் உள்ள வேளாண் கல்லூரியில் சேருமாறு கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. குறிப்பிட்ட தேதிக்குள் திருச்சி கல்லூரியில் சேராததால், மாணவியை கல்லூரியில் இருந்து நீக்கி, பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.
 இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி, மாணவியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும், மாணவி தொடர்ந்து கல்வி பயிலவும் ஏதுவாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில்
 3-ஆம் ஆண்டு பி.எஸ்சி. வேளாண்மை படிக்க மாணவிக்கு இடம் வழங்குமாறு பல்கலைக்கழகத்துக்கு பரிந்துரை செய்தார். இதுதொடர்பான பரிந்துரைக் கடிதம் கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.