சபரிமலையின் புனிதம் காக்க மத்திய அரசு சிறப்புச் சட்டத்தை கொண்டுவரக் கோரி, திருவண்ணாமலையில் இந்து மக்கள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயலர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜெ.அசோக்குமார், நகரத் தலைவர் வ.ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் ர.விஜயராஜ் வரவேற்றார். கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் பரணிதரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து, சபரிமலையின் புனிதம் காக்க மத்திய அரசு சிறப்புச் சட்டத்தை உடனடியாக கொண்டுவர வேண்டும். ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

மே மாத எண்கணித பலன்கள் – 5

கிரிக்கெட்டின் வளர்ச்சியை விட வணிகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஐபிஎல்: முத்தையா முரளிதரன்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

