ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராஜகோபுரம் கட்டுவதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூமி பூஜையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
சேவூரில் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. நூறாண்டுகளுக்கும் மேலான பழைமைவாய்ந்த இந்தக் கோயில் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட உள்ளது. இந்த நிலையில், கோயில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
விழாவில், சேவூர் ஆர்.விஜி, ஒன்றியச் செயலர் பிஆர்ஜி. சேகர், முன்னாள் தலைவர் வெங்கடேசன், கிளைச் செயலர் பாலசந்தர், கிராம முக்கியப் பிரமுகர்கள் கார்த்திகேயன், தனசேகர், புருஷோத்தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 5 வரை சென்னை, வேலூரில் கடும் வெப்ப நிலை நிலவும்!

அதிரடியாக உயர்ந்த வர்த்தக சிலிண்டர் விலை: எவ்வளவு?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 8 மாவட்டங்களில் மழை!

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

