/

தூய்மை அருணை திட்டத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளின் பராமரிப்புப் பணி ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் தூய்மை அருணை திட்டத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளின் பராமரிப்புப் பணியை எம்எல்ஏவும், திட்டத்தின் அமைப்பாளருமான எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 1:15 am

திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் தூய்மை அருணை திட்டத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளின் பராமரிப்புப் பணியை எம்எல்ஏவும், திட்டத்தின் அமைப்பாளருமான எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை தூய்மைப்படுத்துதல், மரக்கன்று நடுதல், இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட பணிகளைச் செய்வதற்காக தூய்மை அருணை என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை நகராட்சியின் 39 வார்டுகளிலும் மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளையும், ஏற்கெனவே நடப்பட்ட மரக்கன்றுகளின் பராமரிப்புப் பணியையும் தொகுதி எம்எல்ஏவும், தூய்மை அருணை திட்டத்தின் அமைப்பாளருமான எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அந்தந்தப் பகுதி தூய்மை அருணை திட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் மரக்கன்று பாதுகாப்பு வளையத்தைச் சுற்றி சிமென்ட் கலவைகளால் பூச வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில், திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களான சாவல்பூண்டி மா.சுந்தரேசன், இரா.ஸ்ரீதரன், மு.பெ.கிரி, ப.கார்த்திவேல்மாறன், சி.என்.அண்ணாதுரை, மருத்துவர் எ.வ.வே.கம்பன், இர.செல்வராஜ், குட்டி க.புகழேந்தி, ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.