திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள், கிருஷ்ணர் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை, பெரிய தெருவில் அமைந்துள்ள ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் கோயிலில் அதிகாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, காலை முதல் இரவு வரை திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பெருமாள் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. காலை, இரவு வேளைகளில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கீழ்பென்னாத்தூரில்...: கீழ்பென்னாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 3 மணிக்கு மேட்டுப்பாளையம் கிராம மக்கள் பங்கேற்ற உரியடி திருவிழா, சறுக்குமரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, உத்ஸவர் வீதியுலா நடைபெற்றது. சுவாமி வீதியுலா வந்த வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் புருஷோத்தமன், ஏழுமலை, எழிலரசன், மருத்துவர் செல்வகணபதி மற்றும் கிராம மக்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல, செய்யாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, வெண்ணை தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
செங்கம்: செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி, காலையில் கோ பூஜை, விக்னேஷ்வர பூஜை, கலச பூஜை, நவக்கிரக ஹேமம், லட்சுமி ஹேமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மூலவர் ஸ்ரீகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றன.
பின்னர், உத்ஸவர் ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் வீதியுலா வந்தார். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை டிவிஎஸ் தொழில் சங்கத் தலைவர் குப்புசாமி மற்றும் ஊர் நாட்டாண்மை, ஊர் முக்கியப் பிரமுகர்கள் செய்திருந்தனர்.
வந்தவாசி: வந்தவாசியை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது. இதையொட்டி, சறுக்கு மரம் ஏறுதல், உறியடி ஆகியவை நடைபெற்றன.
அந்தக் கிராம திரௌபதி அம்மன் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த சுமார் 25 அடி உயர சறுக்கு மரத்தில் இளைஞர்கள் உற்சாகத்துடன் ஏறி பரிசுகளை வென்றனர். மேலும், உறியடித்தல் நிகழ்ச்சியிலும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
விழாவுக்கு ஆலத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பராயன் தலைமை வகித்தார். மேலும், பொதுமக்களுக்கு அவர் அன்னதானம் வழங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர்கள் ஜெயலட்சுமி சுப்பராயன், கண்ணகி ஏழுமலை, யாதவ மகாசபை கிளைத் தலைவர் ஏ.எம்.தாஸ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திராவிடமுருகன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.கே.செல்லன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
ராஜ்காட் - சாந்தி வன் பகுதியை அழகுப்படுத்தும் திட்டத்துக்கு தில்லி அரசு ஒப்புதல்!

மானுடம் தோற்குதம்மா...

கோடை மழை: போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

