தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

வேட்டவலம், செங்கம் பகுதிகளில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 12:56 am

வேட்டவலம், செங்கம் பகுதிகளில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேட்டவலம் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில் ஆவணி மாத கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் ஸ்ரீமுருகப்பெருமான், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு பல்வேறு பூஜை பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதில், கலந்து கொண்ட திரளான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதேபோல, செங்கத்தை அடுத்த மண்மலை முருகன் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை செங்கம் கிருத்திகை வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.