சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

சேவூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராஜகோபுரம் கட்ட பூமிபூஜை: அமைச்சர் பங்கேற்பு

ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராஜகோபுரம் கட்டுவதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற

Updated On :3 செப்டம்பர் 2018, 12:55 am

ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராஜகோபுரம் கட்டுவதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூமி பூஜையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
சேவூரில் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. நூறாண்டுகளுக்கும் மேலான பழைமைவாய்ந்த இந்தக் கோயில் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட உள்ளது. இந்த நிலையில், கோயில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
விழாவில், சேவூர் ஆர்.விஜி, ஒன்றியச் செயலர் பிஆர்ஜி. சேகர், முன்னாள் தலைவர் வெங்கடேசன், கிளைச் செயலர் பாலசந்தர், கிராம முக்கியப் பிரமுகர்கள் கார்த்திகேயன், தனசேகர், புருஷோத்தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.