
காஞ்சிபுரம் - சேலம் வழித்தடத்தில் பேருந்துக் கட்டணம் திடீர் உயர்வு: பயணிகள் அதிருப்தி
காஞ்சிபுரம் - சேலம் வழித்தடத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி புதன்கிழமை திடீரென பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.
காஞ்சிபுரம் - சேலம் வழித்தடத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி புதன்கிழமை திடீரென பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தில் திருவண்ணாமலை மண்டலத்தில் இருந்து தடம் எண்.438 காஞ்சிபுரம் - சேலம் இடையே
11 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் செய்யாறில் இருந்து 11, போளூர், செங்கத்தில் இருந்து தலா ஒன்று என மொத்தம் 11 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் - சேலம் வழத்தடத்தில் அரசுப் பேருந்துகளில் மட்டும் புதன்கிழமை எந்தவித முன்னறிவிப்புமின்றி உயர்த்தப்பட்ட கட்டணம் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டது. அதிலும், வழித்தடம் முழுவதும் உயர்த்தாமல், திருவண்ணாமலை மண்டல எல்லை வரையில் காஞ்சிபுரம் - திருவண்ணாமலை வரை மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, பயணி ஒருவருக்கு ரூ.15 வீதம் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ரூ.100-க்குப் பதில் ரூ.115-ம், செய்யாறிலிருந்து காஞ்சிபுரத்துக்கு ரூ.25-க்குப் பதில் ரூ.30-ம், செய்யாறிலிருந்து ஆரணிக்கு ரூ.28-க்கு பதில் ரூ.31-ம் உயர்த்தப்பட்ட கட்டணமாக பயணிகளிடம் வசூலிக்கப்பட்டது.
இதேபோல, குறைந்த தொலைவுள்ள ஆரணி - களம்பூர் இடையே ரூ.15-ம், ஆரணி - எஸ்.வி.நகரம் இடையே ரூ.15-ம், அதிக தொலைவுள்ள ஆரணி - மாம்பாக்கம் இடையே ரூ.15-ம், ஆரணி - வடமாதிமங்கலம் இடையே ரூ.15-ம் என கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
பயணிகள் வாக்குவாதம்:
அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அதுவும் தடம் முழுவதும் கட்டணம் உயர்த்தப்படாமல், தடத்தின் ஒரு பகுதிக்கு மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, செய்யாறு அரசுப் பேருந்து பணிமனையில் மட்டும் தன்னிச்சையாக அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பயணிகள், நடத்துநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
திடீர் கட்டண உயர்வால், அரசுப் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன், தனியார் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை, வருவாய் அதிகரிக்க திருவண்ணாமலை மண்டலம் வழிவகை செய்துள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் குற்றஞ்சாட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





