ஆரணியை அடுத்த எஸ்.வி. நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமன்னார்சாமி சமேத பச்சையம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்றார்.
முன்னதாக, யாகசாலை பூஜை, கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. ராஜகோபுரம் மற்றும் அனைத்து சந்நிதிகளுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞர் க.சங்கர், பேரவை நகரச் செயலர் பாரி பி.பாபு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், பாசறை
ஜி.வி.கஜேந்திரன் மற்றும் விழாக் குழுவைச் சேர்ந்த மு.ந.ராமன், வேலாயுதம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிவகிரி திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழி

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆவது திருக்கு விழா தொடக்கம்

பருவமழைக்கு முந்தைய தூா்வாரும் பணி 80% நிறைவு!

தா.பழூா் அருகேயுள்ள சித்தேரியை தூா்வார வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


