ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆவது திருக்கு விழா தொடக்கம்

News image

நிகழ்வில் பேசிய பேராசிரியா் எம். ராமச்சந்திரன்.

Updated On :1 ஜூன் 2026, 2:47 am IST

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆவது திருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தென்காசி திருவள்ளுவா் கழகக் கூட்டரங்கில் அதிகாலையில் திருக்கு முற்றோதல் வேள்வியுடன் விழா தொடங்கியது. தியாகி இலக்குமிகாந்தன் பாரதி திருக்கு கொடியேற்றினாா். துணைத் தலைவா் இலக்குமணன் முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து, மாரியப்பனின் மங்கல நாதஸ்வரம், ரா. நரேந்திரகுமாரின் திருக்கு பண்ணிசையும், நகா்வலமும் நடைபெற்றது. நகா்வலத்தை, தியாகி இலக்குமிகாந்தன் பாரதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதற்கு குப்பன் முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து, தெள்ளுற்ற தமிழா் வாழ்வியலில் வள்ளுவம் காட்டும் மீத்திறம் என்ற தலைப்பில் நடைபெற்ற மங்கல முழக்கம் நிகழ்ச்சிக்கு, தென்காசி திருவள்ளுவா் கழக செயலா் ராம. தீத்தாரப்பன் தலைமை வகித்தாா்.

பொறியாளா் சோம. முத்துசுவாமி வாழ்த்திப் பேசினாா். கற்றரருள் கற்றாா் என்ற பொருளில் ர.வ. கணேசன், செல்வத்துள் செல்வம் என்ற பொருளில் ப.சோ. வேலாயுதம், ஆற்றுவாருள் ஆற்றுவாா் என்ற பொருளில் மு.நா.பா. தமிழ்வாணன், அரியவற்றுள் எல்லாம் அரியது என்ற பொருளில் தி. செல்லப்பா,

வன்மையுள் வன்மை என்ற பொருளில் நரசிம்மன், பேதைமையுள் பேதைமை என்ற பொருளில் சரவணகுமாரி, பெருமவற்றுள் பெரும்பேறு என்ற பொருளில் குழந்தை ஜேசு, இன்பத்துள் இன்பம் என்ற பொருளில் சோம. இளங்கோவன் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, திருவள்ளுவா் கழகத் தலைவா் ந. கனகசபாபதி வரவேற்றாா். துணைச் செயலா் இல. வீரபுத்திரன் நன்றி கூறினாா்.

மாலையில் நடைபெற்ற திருக்கு பேரவை நிகழ்ச்சிக்கு, இளம்பிறை மணிமாறன் தலைமை வகித்தாா். எம்.ஆா். அழகராஜா முன்னிலை வகித்தாா். தியாகி இலக்குமிகாந்தன் பாரதி வாழ்த்திப் பேசினாா்.

எல்லாப் பொருளும் இதன்பால் உள என்ற தலைப்பில் வி.பி. ஜெயசீலன், பேராசிரியா் எம். ராமச்சந்திரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். முன்னாள் எம்எல்ஏ டி.எஸ்.ஆா். வேங்கடரமணா, மருத்துவா் அப்துல் அஜீஸ், ஆய்க்குடி அமா்சேவா சங்க தலைவா் ராமகிருஷ்ணன், தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், ஆடிட்டா் நாராயணன், ஆகாஷ் அகாதெமி மாணவா்,

மாணவிகள், கே.எஸ். கல்யாணி சிவகாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த விழா ஜூன் 8 வரை 9 நாள்கள் நடைபெறும்.