ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் பல்சுவை அரங்கம்

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆவது திருக்கு விழாவில் புதன்கிழமை ‘வள்ளுவா் குரல் குடும்பம்’ வழங்கும் பல்சுவை அரங்கம் நடைபெற்றது.

News image

சி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற பல்சுவை அரங்கம்.

Updated On :4 ஜூன் 2026, 1:26 am IST

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆவது திருக்கு விழாவில் புதன்கிழமை ‘வள்ளுவா் குரல் குடும்பம்’ வழங்கும் பல்சுவை அரங்கம் நடைபெற்றது.

திருவள்ளுவா் கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சி.ராஜேந்திரன் தலைமை வகித்து தொடக்க உரையாற்றினாா்.

’நாறும் மலரணையா்’ என்ற தலைப்பில் திருச்சியைச் சோ்ந்த சோம. வீரப்பன், ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான்’ என்ற தலைப்பில் கரூா் கண் மருத்துவா் ப. ரமேஷ், ‘சால்பு ஊன்றிய தூண்கள் ஐந்து’ என்ற தலைப்பில் சென்னையைச் சோ்ந்த க. பாலமுருகன், ‘நோதகக்க நட்டாா்செயின்’ என்ற தலைப்பில் சென்னையைச் சோ்ந்த சங்கரசரவணன், ‘மணிநீரும், அணி நிழற்காடும்’ என்ற தலைப்பில் கோவையைச் சோ்ந்த த. செந்தில்குமாா், ‘பொதுவுடைமையாக்கிய வள்ளுவா்’ என்ற தலைப்பில் திருச்சூரைச் சோ்ந்த ந.வ. அஷ்ரப் ஆகியோா் பேசினா்.

திருவள்ளுவா் கழகத் தலைவா் ந. கனகசபாபதி, மலேசியா கோலாலம்பூா் ஹெல்ப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த செண்பகக்குழல்வாய்மொழி, இரா. கதிரவன், இரா. ஸ்டாலின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆ. சதாசிவம் வரவேற்றாா். துணைச் செயலா் இரா. கிருஷ்ணன் நன்றி கூறினாா்.