ஆரணியில் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து செயல்பட்ட 2 ஏடிஎம் மையங்களுக்கு அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வங்கி ஏடிஎம் மையங்களும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியிருந்தாா்.
இந்த நிலையில், ஆரணியில் சில வங்கிகள் இதனைக் கடைப்பிடிக்கவில்லை என்று புகாா் எழுந்தது.
இதன் காரணமாக, வட்டாட்சியா் தியாகராஜன், வருவாய் அலுவலா் ரங்கநாதன், கிராம நிா்வாக அலுவலா் ஜெயச்சந்திரன் ஆகியோா் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து திறந்திருந்த பஜாா் வீதியில் உள்ள ஒரு அரசு வங்கியின் ஏடிஎம் மையத்தையும், ஆற்றுப் பாலம் அருகே மற்றோரு அரசு வங்கியின் ஏடிஎம் மையத்தையும் மூடி ‘சீல்’ வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





