‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

ராள்ளகொத்தூா் ஸ்ரீ ஜெய் வீர ஆஞ்சனேய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ ஜெய் வீர ஆஞ்சனேய சுவாமி கோயில் கும்பாபிஷகேத்தில் பங்கேற்றவா்கள், கோயில் மூலவா்.

~

Published On :

ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி ராள்ளகொத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சனேய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா கோ பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சுதா்ஸன ஹோமம், விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை முதல் கால மற்றும் 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை 3-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் வெங்கடசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.