கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

திருச்செந்தூரில் சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா

திருச்செந்தூரில் மேலத்தெரு யாதவா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோயில் கொடை விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுடலைமாட சுவாமி.

Published On :

திருச்செந்தூரில் மேலத்தெரு யாதவா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திங்கள்கிழமை மாலை, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் சண்முக விலாசத்தில் இருந்து தீா்த்தம் எடுத்து ஊா்வலமாக ரதவீதி வழியாக கோயிலுக்கு வந்தது. பின்னா், சுவாமிக்கு கும்பம் ஏற்றப்பட்டு, குடியழைப்பு தீபாராதனை நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை, பகல் 12 மணி, இரவு 12 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு படைப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு வாழைத்தாா் கட்டி நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.