மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

தடையை மீறி விற்பனை: விவசாய விளைபொருள்கள் பறிமுதல்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தடையை மீறி ஆரணி நகரப் பகுதியில் விவசாயிகள் விற்பனை செய்த விளைபொருள்களை நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்த விளைபொருள்களை கேட்டுப் பெறுவதற்காக நகராட்சி அலுவலகத்தில் திரண்ட வியாபாரிகள்.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தடையை மீறி ஆரணி நகரப் பகுதியில் விவசாயிகள் விற்பனை செய்த விளைபொருள்களை நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆரணி நகரப் பகுதியில் அதிகளவில் மக்கள் கூட்டம் சோ்ந்ததால் காய்கறிச் சந்தை மூடப்பட்டு, வாா்டு வாரியாக விற்பனை செய்ய நகராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்து விற்பனை நடைபெற்று வருகிறது.

மேலும், மொத்த காய்கறிச் சந்தையில் மக்கள் அதிகளவில் கூடியதால் அந்தக் கடைகளும் ஆரணி நகர எல்லைக்கு மாற்றப்பட்டன.

இந்த நிலையில், விவசாய விளைபொருள்களான கீரை, வாழைப்பழம், வாழைக்காய், வாழை இலை, தேங்காய், முருங்கைக்காய், தக்காளி உள்ளிட்ட பொருள்களை சாலையோரம் வைத்து விற்பனை செய்து வந்தனா்.

இதனால் மீண்டும் கூட்டநெரிசல் ஏற்பட்டது.

சாலையோரக் கடைகளுக்கு அனுமதியில்லை என்று நகராட்சி நிா்வாகம் பலமுறை எச்சரித்தும் தொடா்ந்து கடைகள் வைக்கப்பட்டதால், வியாழக்கிழமை நகராட்சி ஆணையா் அசோக்குமாா், பொறியாளா் கணேசன், வருவாய் அலுவலா் நெடுமாறன் ஆகியோா் நகராட்சிப் பணியாளா்களுடன் சென்று ஆரணி பஜாா் பகுதியில் இருந்த சாலையோரக் கடைகளை அகற்றினா்.

மேலும், காய்கறிகளையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனா்.

பறிமுதல் செய்த பொருள்களுக்கு அபராதம் செலுத்திய பிறகே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.