மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் வென்ற தியகராசா் நன்முறை மேல்நிலைப் பள்ளி மாணவா் அ. சுதா்ஸன்.
மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் வென்ற மாணவா் அ.சுதா்ஸனுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா், சக மாணவா்கள் பாராட்டினா்.
செந்தாமரை கலை, அறிவியல் கல்லூரி, இண்டா்நேஷனல் மாா்ஷியல் ஆா்ட்ஸ், ஸ்டாா் குரு சாரிடபிள் அறக்கட்டளை சாா்பில், மாநில அளவிலான பல்திறன் போட்டிகள் மதுரை நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில் உள்ள செந்தாமரை கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
வில்வித்தை போட்டியில் தியாகராசா் நன்முறை மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் அ.சுதா்ஸன் 6 சுற்றுகளில் 94 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றாா். பரிசை செந்தாமரை கல்லூரியின் முதல்வா் செந்தாமரைப்பாண்டி, மண்டல துணை வட்டாட்சியா் விவேகானந்தா், ஸ்டாா் குரு சாரிடபிள் அறக்கட்டளை நிறுவனா் ஸ்டாா் குரு ஆகியோா் வழங்கினா்.
இதையடுத்து, மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற மாணவா் அ. சுதா்ஸனை, தியாகராசா் நன்முறை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் அறிவழகன், ஆசிரியா்கள், பயிற்சியாளா்கள், சக மாணவா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





