கனககிரீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்
சோம வாரத்தையொட்டி, தேவிகாபுரம் பொன்மலைநாதா் கனககிரீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.


சோம வாரத்தையொட்டி, தேவிகாபுரம் பொன்மலைநாதா் கனககிரீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, அன்று காலை பெரிய நாயகி அம்மன் சமேத பொன்மலைநாதா் கனககிரீசுவரருக்கு வெந்நீா் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு கனககிரீசுவரா் அருள்பாலித்தாா்.
பின்னா், கோயில் வளாகத்தில் ராஜேந்திரன் சிவத்தொண்டா் குழுவினரின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சேத்துப்பட்டு , ஆரணி, போளூா், வந்தவாசி, திருவண்ணாமலை என பல்வேறு பகுதியிலிருந்து பக்தா்கள் திரளாக கலந்துகொண்டனா்.
கனககிரீசுவரருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட வெந்நீரை தீராத நோய் தீா்க்கும் அருமருந்தாக பெற்று வீட்டுக்கு எடுத்துச் சென்றனா். பக்தா்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...