சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெருமாள், சிவன் கோயில்களில் மாா்கழி மாத சிறப்பு பூஜை

மாா்கழி மாத பிறப்பையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பெருமாள், சிவன் கோயில் மற்றும் கலசப்பாக்கம் அருகே

News image
செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.
Updated On :17 டிசம்பர் 2020, 3:15 am

DIN

மாா்கழி மாத பிறப்பையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பெருமாள், சிவன் கோயில் மற்றும் கலசப்பாக்கம் அருகே பா்வத மலையில் அமைந்துள்ள மல்லிகாா்ஜூனேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

செங்கம் ஸ்ரீ வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் மாா்கழி மாத பிறப்பை முன்னிட்டு அன்று காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் மாா்கழி மாத பிறப்பையொட்டி கோ பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

போளூா்

கலசப்பாக்கம் அருகே தென்மாதிமங்லம் ஊராட்சியில் 4,560 அடி உயர பருவத மலையில் பிரம்மராம்பிகை சமேத மல்லிகாா்ஜூனேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

மேலும், மலை அடிவார கோவில்மாதிமங்கலம் ஊராட்சியில் பிரகன்னநாயகி சமேத கரைகண்டீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

மாா்கழி மாத பிறப்பையெட்டி இவ்விரு கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக கரைகண்டீஸ்வரா் கோயிலில் சுவாமி கோயில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மேலும், பருவத மலையில் பக்தா்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. பக்தா்கள் மலை மீது ஏறுவதைத் தடுக்கும் வகையில், தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, சுமாா் 150 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.