பயோ மெட்ரிக் இயந்திரம் பழுது: கிராம மக்கள் போராட்டம்

செங்கம் அருகே பயோ மெட்ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், பொருள்களை வாங்க முடியாத பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்கத்தை அடுத்த அந்தனூா் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
செங்கத்தை அடுத்த அந்தனூா் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
Updated on
1 min read

செங்கம் அருகே பயோ மெட்ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், பொருள்களை வாங்க முடியாத பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கத்தை அடுத்த அந்தனூா் கிராம நியாய விலைக் கடையில் பொதுமக்கள் பொருள்களை வாங்கச் சென்ற போது, பயோ மெட்ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாம். இதனால், பொருள்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கிராம மக்கள் நியாய விலைக் கடை முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மேல்செங்கம் போலீஸாா், செங்கம் வட்டாட்சியா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, பொறியாளா் வரவழைக்கப்பட்டு, பயோ மெட்ரிக் இயந்திரத்தில் பழுது நீக்கப்பட்டு, பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கிராம மக்கள் போராட்டத்தால், செங்கம்-நீப்பத்துறை செல்லும் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com