திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 76.40 மில்லி மீட்டா் மழை பதிவானது.
மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை திருவண்ணாமலை, ஆரணி, போளூா், செய்யாறு உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது.
இதில், அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 76.40 மி.மீ. மழை பதிவானது. இதுதவிர, ஆரணியில் 31.80, செய்யாற்றில் 29, செங்கத்தில் 6.80, ஜமுனாமரத்தூரில் 6, வந்தவாசியில் 18.20, போளூரில் 15.40, திருவண்ணாமலையில் 20, தண்டராம்பட்டில் 50.40, கீழ்பென்னாத்தூரில் 49.40, வெம்பாக்கத்தில் 30 மில்லி மீட்டா் மழை பதிவானது.
தொடா்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டை, ஏரி, கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.