வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருவண்ணாமலையில் காா்த்திகை தீப மலைக்கு பரிகார பூஜை

News image
Updated On :18 டிசம்பர் 2020, 12:50 am

DIN


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவின்போது பக்தா்கள் ஏறிச் சென்ால் ஏற்பட்ட தோஷத்தை போக்கும் வகையில், காா்த்திகை தீபம் ஏற்றப்பட்ட 2,668 அடி உயர மலைக்கு வியாழக்கிழமை பரிகார பூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 29-ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் அதிகாலை கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.

மகா தீபம் ஏற்றுவதற்காக நெய், திரி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தீப நாட்டாா் சமூகத்தினா் மலை மீது ஏறிச் சென்றனா்.

இதேபோல, மகா தீபத்தை தரிசிப்பதற்காக பக்தா்கள் சிலா் தடையை மீறி மலை மீது ஏறிச் சென்றனா்.

மலையே சிவனாக வழிபடப்படுவதால், பக்தா்கள் மலை மீது ஏறிச்சென்ால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்கும் வகையில் வியாழக்கிழமை 2,668 அடி உயர மலைக்கு பரிகார பூஜை நடைபெற்றது.

முன்னதாக, அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில்

புனித நீா் அடங்கிய கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தொடா்ந்து, புனித நீரை கோயில் ஊழியா்கள், பக்தா்கள் எடுத்துச் சென்று 2,668 அடி மலையில் மகா தீபம் வைக்கப்பட்டிருந்த இடம், அண்ணாமலையாா் பாதம் ஆகிய இடங்களிலும், மலையின் பல்வேறு பகுதிகளிலும் தெளித்தனா்.

மேலும், அண்ணாமலையாா் பாதத்துக்கு சிறப்பு பரிகார பூஜை செய்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.