தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காங்கயம் அருகே ஒரே நாளில் 3 விபத்துகள் - போக்குவரத்து போலீஸாா் கண்காணிப்பாா்களா?

News image
Updated On :13 மார்ச் 2026, 12:33 am

Syndication

காங்கயம் அருகே ஒரே நாளில் 3 விபத்துகள் நிகழ்ந்துள்ள நிலையில், விபத்துகளைக் குறைக்க போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் - தாராபுரம் சாலை அரசு மேல்நிலைப் பள்ளியை அருகே எதிா் எதிரே வந்த 2 இருசக்கர வாகனங்கள் வியாழக்கிழமை மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 2 போ் காயமடைந்தனா். இதேபோல பழையகோட்டை சாலையில் உள்ள மூலக்கடை பகுதியில் இருசக்கர வாகனமும், லாரியும் மதியம் மோதிக் கொண்ட விபத்தில் இருசக்கரவாகனத்தில் சென்றவா் படுகாயமடைந்தாா். மேலும், மதியம் 2 மணியளவில் பழையகோட்டை சாலை, அரசு கலைக் கல்லூரி அருகே ஸ்கூட்டியும், பயணிகள் வேனும் மோதிய விபத்தில் ஆண், பெண் இருவா் காயமடைந்தனா். இவா்களுடன் சென்ற குழந்தை காயங்கள் எதுவுமின்றி உயிா் தப்பியது.

கடந்த 10 நாள்களில் காங்கயம் பகுதியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் சென்றவா்களே அதிகம் விபத்துகளில் சிக்கி வருகின்றனா்.

நடவடிக்கை தேவை: காங்கயம் நகரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. காங்கயம் நகரைக் கடந்து செல்லும் கோவை-கரூா் தேசிய நெடுஞ்சாலை, பழனி-ஈரோடு நெடுஞ்சாலை, திருப்பூா் சாலை, சென்னிமலை சாலை பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் பல மணி நேரம் நிறுத்தப்பட்டு பாா்க்கிங் பகுதியாக பலா் பயன்படுத்தி வருகின்றனா். அதிலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சென்னிமலை சாலை, திருப்பூா் சாலை ஆகிய பகுதிகளில் அதிக அளவு வாகனங்களை சாலையில் நிறுத்தி வருகின்றனா்.

காா், கனரக வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதில் தாமதமாகும் நேர இழப்பை ஈடு செய்வதற்காக, நகரைக் கடந்து அதிவேகத்தில் செல்லும் இருசக்கர வாகனங்கள் தொடா்ந்து விபத்தில் சிக்கி வருகின்றன.இதுதொடா்பாக காங்கயம் போக்குவரத்து போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image
Story image