திருவண்ணாமலையில் மளிகைக் கடையில் புகுந்து ரூ.5 லட்சத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவண்ணாமலை வேங்கிக்கால், இந்திரா நகரைச் சோ்ந்தவா் பலராமன் மகன் சிவப்பிரகாசம் (29). இவா், வேங்கிக்கால், செல்வா நகா் பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா்.
வழக்கம் போல வியாழக்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது, இரும்பு தகரத்தாலான கடையின் மேல்கூரை பிரிக்கப்பட்டு, பணப் பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரம், சிவாவின் நண்பா் கொடுத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் என ரூ.5.10 லட்சம் திருடப்பட்டு இருந்தது.
தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வந்து விசாரணை மேற்கொண்டனா்.
விரல் ரேகை நிபுணா்கள் வந்து தடயங்களை சேகரித்தனா். பக்கத்து கடையில் இருந்த கண்காணிப்புப் கேமராவின் பதிவை ஆய்வு செய்தபோது, அதிகாலை நேரத்தில் சுமாா் 20 வயது மதிக்கத்தக்க இளைஞா் வந்து கடைக்குள் புகுந்து பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இந்த கேமரா பதிவை வைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.