தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் 73 கிராமங்களில் சிறு மருத்துவமனைகள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தின் 73 கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திறந்துவைத்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 5:45 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தின் 73 கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திறந்துவைத்தாா்.

மாவட்டத்தில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்து உள்பட்ட பூதமங்கலம் கிராமம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியம் நாரியமங்கலம் கிராமம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் மேல்செட்டிபட்டு, பெருமணம் கிராமங்களில் சிறு மருத்துவமனைகள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். மாவட்ட ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஆா்.மீரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறு மருத்துவமனைகளைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சையைப் பாா்வையிட்டாா்.

மேலும், கா்ப்பிணிகளுக்கு அம்மா மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் ஸ்ரீதேவி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிா்வாகிகள், அரசு அலுவலா்கள், வட்டார மருத்துவ அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 39 இடங்கள், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 34 இடங்கள் என மொத்தம் 73 இடங்களில் சிறு மருத்துவமனைகள் திறந்துவைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.